"அவள நான் பாத்துகிட்டே இருக்கணும்" - எதிர் வீட்டு டீச்சரை வேலையை விட்டு நிறுத்த அங்கிள் பார்த்த வேலை
சென்னையில், எதிர்வீட்டு பெண்ணை சமூக வலைதளத்தில் அவதூறாக சித்தரித்த 43 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
முகப்பேர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் விஜயராஜ். இவரது குடும்ப நண்பராக எதிர் வீட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை இருந்துள்ளார். ஆசிரியை வேலைக்கு சென்று விடுவதால், அவருடன் பேச முடியாமல் விஜயராஜ் தவித்துள்ளார். இந்நிலையில், தனியார் பள்ளி ஆசிரியையை வேலையைவிட்டு நிறுத்த எண்ணி, அவரை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்துள்ளார். இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர் கொடுத்த புகாரின்பேரில் விஜயராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.