தமிழகத்தில் சத்தம் இல்லாமல் பரவும் உயிர் கொல்லி நோய்.. ஒரே மாவட்டத்தில் 15 பேர்.. அதிர்ச்சியில் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில், 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தினந்தோறும் அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனி காய்ச்சல் வார்டு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தற்போது 77 நோயாளிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பரிசோதனை செய்ததில் மூன்று வயது சிறுமி உட்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தனியார் மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.