பாலியல் அழைப்பு விடுத்த நபருக்கு தனியாக சென்று தக்க பாடம் புகட்டிய ஆலிசா
சென்னையில், செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் அழைப்பு விடுத்த நபரை, பா.ஜ.க. பெண் நிர்வாகி, தனி ஆளாகச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தார். பா.ஜ.க. திறன் மற்றும் விளையாட்டுப்பிரிவு செயலாளராக உள்ள ஆலிசா அப்துல்லாவுக்கு, ஒருவர் செல்போனில் பாலியல் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், ஆலிசா அப்துல்லா தனியாகச் சென்று அந்த நபர் தங்கி இருந்த தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருந்து பிடித்து வந்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். முன்னதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தபோது தன்னை அலைக்கழித்ததாக தெரிவித்தார்.