"இந்த உடம்பே என் குடும்பத்திற்குதான்" சொல்லி சொல்லி உழைத்த மகன் ஜிம்மில் ரத்தம் கக்கி பலி..கதறும் தாய்
கோட்டை பகுதியை சேர்ந்த சேட்டு என்கின்ற மகாதிர் மகமுத், ஆற்றோர தெரு பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார்... நேற்று முன்தினம் ஏழு மணிக்கு உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மகாதீர் 8 மணியைக் கடந்தும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துள்ளார்... பின்னர் அங்கிருந்த குளியலறையில் குளிக்கச் சென்ற அவர் திரும்ப வரவேயில்லை... இதனால் அவருடைய ஓட்டுநர் முஸ்தபா உள்ளே சென்று பார்த்த போது ரத்தம் வழிந்த நிலையில் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார்... உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட மகாதிர் நீராவியில் குளித்த நிலையில், இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்... இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், தினமும் கடினமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை ஆணழகன் போல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்றும்,
அதிகப்பட்சமாக 150 முதல் 200 கிலோ வரை எடை தூக்குவார் எனவும் இறப்பு குறித்து கவலை தெரிவித்தனர்... இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.