தவறான பாதையில் சுற்றிய பள்ளி மாணவனை சில வினாடிகளில் திருத்திய இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ

Update: 2024-11-19 09:56 GMT

தவறான பாதையில் சுற்றிய பள்ளி மாணவனை சில வினாடிகளில் திருத்திய இன்ஸ்பெக்டர் - சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குடும்ப பிரச்சினை புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த 9ம் வகுப்பு மாணவரை காவல் நிலையத்தில் ஆய்வாளர் தன் இருக்கையில் அமர வைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. என் ஜி ஓ காலனியைச் சேர்ந்த மங்களேஸ்வரிக்கும் அவரது கணவர் தங்கராஜின் உறவினர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மங்களேஸ்வரியின் 9ம் வகுப்பு படிக்கும் மகன் தன் தாயுடன் பகையில் இருந்தவர்களுடன் வயது வித்தியாசமின்றி சுற்றி வந்ததாக தெரிகிறது. தாயின் அறிவுரையையும் அவர் கேட்காத நிலையில், மங்களேஸ்வரி போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மாணவன் உட்பட இருதரப்பினரையும் காவல் நிலைத்திற்கு வரவழைத்து விசாரணை செய்ததுடன், சிறுவனுக்கு ஒரு ஆசிரியரைப் போல் அறிவுரை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்