திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் நந்தா, எளாவூர் பஜாரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி வகுப்பு முடிந்து வீடு செல்வதற்காக, சக மாணவர்களோடு பள்ளிக்கு வெளியே பேருந்து நிறுத்தம் நோக்கி நந்தா நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் மீட்டு எளாவூர் சோதனைச்சாவடி வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்திற்கு காரில் கொண்டு சென்ற நிலையில், நந்தா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.