#BREAKING || அதிகாலையே திடீரென தீ பற்றி எரிந்த படகுகள்...குமரியில் பரபரப்பு
வைக்கல்லூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 க்கும் மேற்பட்ட படகுகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன பல கோடி மதிப்பில் இழப்பு தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இவ்வாறு மீன்பிடி தொழில் செய்யும் படகுகள் தொழிலுக்கு செல்லாத நேரங்களிலும் படகுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் நேரங்களிலும் தேங்காய்பட்டணம் துறைமுக தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை செய்யப்படுவது வழக்கம் அதன்படி வைக்கல்லூர் பரக்காணி பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு வைக்கல்லூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கி உள்ளது இதனை ஆற்றின் மறுகரையில் இருந்து பார்த்தவர்கள் ஊரில் உள்ள மீனவர்கள் மற்றும் தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர் தகவலறிந்து வந்த ஒருசில மீனவர்கள் மற்றும் தீ அணைப்பு துறையினர் தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது வரை சுமார் 5 க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து நாசமாகி உள்ளது இதன் காரணமாக படகு உரிமையாளர்களுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது இந்த விபத்து எப்படி ஏற்பட்டது யார் யாருடைய படகுகள் எரிந்து போயுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்காத நிலையில் பற்றி எரியும் தீய் வேறு படகுகளிலும் பரவாதவாறு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது