தவெகவில் இருந்து கூண்டோடு விலகிய மகளிரணி - விஜய்க்கு சென்ற அதிர்ச்சி செய்தி

Update: 2024-12-22 10:30 GMT

அரியலூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என குற்றம் சாட்டி அக்கட்சியின் மகளிர் அணி கூண்டோடு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது... தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி ஜெயபால் தவெகவில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக இருந்த நிலையில் கட்சி நிகழ்ச்சியில் இவர் உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. நியாயம் கேட்ட போது மாவட்ட நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள், ஏற்றப்பட்ட கட்சி கொடியினை இறக்கி கட்சியில் இருந்து விலகினர். அப்போது அங்கு வந்த விஜய் கட்சி நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி இறக்கலாம் என்று கேட்டதால் வாக்குவாதம் எழுந்தது. அத்தோடு கொடியை இறக்கும் போதுதான் கொடி தலைகீழாக இருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்