பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - கோரமாய் சிக்கிய ஓட்டுநர்
அரக்கோணத்தில் தனியார் பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து பேர் படுகாயம்அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கடற்படை விமான தளம் வளாகம் எதிரே அரியலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சிமெண்ட் லாரியும், திருத்தணியில் இருந்து ஆரணி சென்ற தனியார் பேருந்தும் விடியற்காலை 4.30 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநர் கேசவனின் கால்கள் சிக்கிக் கொண்ட நிலையில், லாரியின் முன்பகுதி அப்புறப்படுத்தப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.