#JUSTIN || பயணியை சரமாரியாக தாக்கிய அதிகாரி.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. சென்னை ஏர் போர்டில் பரபரப்பு

Update: 2024-12-08 11:59 GMT

சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது வாக்குவாதம் சுங்க அதிகாரி தாக்கியதாக இலங்கை வாலிபர் பேசிய் வீடியோ வைரலால் பரபரப்பு கொலை மிரட்டல் விடுத்தாக சுங்க இலாகா துணை கமிஷனர் போலீசில் புகார்.

சென்னை மீனம்பாக்கம் அன்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.

அப்பொழுது சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகல் ஒவ்வொருவராக சோதனை செய்தனர்.

அப்பொழுது இலங்கையில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த சலீம் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சுங்க இலாகா துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது சலீம் நான் துணி வியாபாரம் செய்வதாகவும் அதை வாங்குவதற்காக தான் சென்னை அதிகாரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகளுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுங்க இலாகா துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து சலீமுடன் வந்தவர்கள் சென்னை விமான நிலையத்திற்குள் சுங்கத்துறை அதிகாரி சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணன் போலீசில் சோதனை மற்றும் விசாரணை செய்த போது தன்னை சலீம் அவரது நண்பர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்தார். இது தொடர்பாக விமான நிலைய போலீசார் சலீம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்