பண்ருட்டி அருகே சொத்து பிரிப்பதில் சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த அண்ணன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் அவரது தம்பி பிரகாஷ் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ் மீண்டும் பிரபுவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிரபு புதுப்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பேச்சு வார்த்தை நடத்தி பிரபுவை பத்திரமாக மீட்டனர்.