சென்னை ரோட்டில் 9 வயது சிறுமியிடம் எல்லை மீறிய 60 வயது முதியவர் - கண்ணால் பார்த்த மக்கள் கொடுத்த டிரீட்மென்ட்
சென்னை வில்லிவாக்கத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியிடம் முதியவர் சிதம்பரம் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமியிடம் முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.