உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிவாகை சூடி வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷிற்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் 14 சுற்றுகளாக உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, குகேஷ் உலக சாம்பியன் ஆனார். மிக இளம் வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற சாதனையையும் 18 வயதே ஆன குகேஷ் நிகழ்த்தினார். இந்நிலையில், உலக சாம்பியன் குகேஷிற்கு கோப்பை வழங்கி சர்வதேச செஸ் சம்மேளனம் கவுரவித்தது.