சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தபாங் டெல்லி அணி முன்னேறி உள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய டெல்லி அணி 8-க்கு 6 என்ற கணக்கில் அகமதாபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவாவை டெல்லி எதிர்கொள்கிறது.