``இனி ஆல்-பாஸ் கிடையாது.. மத்திய அரசு அறிவித்தது சரிதான்’’ - மாணவர் வரவேற்பு.. பெற்றோர் எதிர்ப்பு

Update: 2024-12-24 07:31 GMT

பள்ளிகளில் 5 மற்றும் 8 ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற வகையில் மத்திய கல்வித் துறை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டு நிலையில் அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி சட்டத்தின் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்யும் நடைமுறையைப் பின்பற்றி வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் இந்த கொள்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் தோல்வி அடைந்த மாணவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் 5 மற்றும் 8 ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் அதே வகுப்பில் மீண்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கலாம்...

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.

அதில் தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையைப் பின்பற்றி வருவதால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பள்ளிகளைத் தவிர வேறு எந்த பள்ளிக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும், இங்கு ஆல் பாஸ் நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மத்திய அரசின் அறிவிப்பினால் மாணவர்களோ ஆசிரியர்களோ கல்வியாளர்களோ குழப்பம் அடையத் தேவை இல்லை எனவும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்