திபுதிபுவென ஓடி வந்த விசிகவினர் - பதறிப்போன போலீஸ்.. உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-12-21 07:05 GMT

திருத்தணியில் விசிக்காவினர் ஓடிப்போய் ரயிலை மறித்து முன் பகுதி இன்ஜின் மேலே ஏறிக்கொண்டு போராட்டம்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து. தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருவ பொம்மை எரிப்பு மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருத்தணி ரயில் நிலையத்தில் திருப்பதியில் இருந்து சென்னை செல்லக்கூடிய சப்தகிரி விரைவு ரயிலை விசிகவினர் கொடிகளை ஏந்திக்கொண்டு 30- கும் மேற்பட்ட விசிகவினர் தண்டவாளத்தில் ஓடி வந்து விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு இன்ஜின் முன் பகுதி மீது ஏறிக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் மட்டும் திருத்தணி போலீசார் ரயில் மறியல் ஈடுபட்ஙடவர்களை கைது செய்தனர். சென்னை செல்லக்கூடிய விரைவு ரயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது....

Tags:    

மேலும் செய்திகள்