"தினகரனின் எண்ணத்தை தவிடு பொடியாக்கியவர் ஈ.பி.எஸ்" - அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி
அதிமுக நிர்வாகிகளை அடக்கி ஆளலாம் என்ற டிடிவி தினகரனின் எண்ணத்தை தவிடு பொடியாக்கியவர் எடப்பாடி பழனிசாமி என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக நிர்வாகிகளையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடக்கி ஆளலாம் என்ற தினகரனின் நினைப்பை எடப்பாடி பழனிசாமி தவிடு பொடியாக்கியதால், கோபத்தில் ஏதேதோ அவர் பேசுவதாக விமர்சித்தார். மேலும், அரசியலில் தோற்றுப் போனவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.