காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- 9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார், சுனிதா வில்லியம்ஸ்.... டிராகன் விண்கலத்தில் புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேரும் 17 மணி நேரம் பயணம்...
- 4 பாராசூட்டுகள் உதவியுடன் புளோரிடா கடற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்... விண்வெளி வீரர்களை, படகில் வந்து பாதுகாப்புடன் மீட்டுச் சென்ற குழுவினர்....
- ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்....உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு, நிபந்தனைகளுடன் புதின் ஒப்புதல்....
- தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்... இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
- தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ... உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.....
- நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்... தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிசத்தை தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி...
- ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கில் காவல்துறை மீது குற்றம்சாட்டுவதில் முகாந்திரம் இல்லை... முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறுவதில் உண்மை இல்லை எனவும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமனி விளக்கம்...
- கோவில்களை விட்டு அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்... அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாத அறநிலையத்துறை, உண்டியல்களை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு...
- தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதலமைச்சர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி... அண்ணாமலை போன்றவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு என்றும் விமர்சனம்...
- சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விவாதத்தின் போது ஈ.பி.எஸ்.க்கு குறிப்பு எடுத்துக்கொடுத்த செங்கோட்டையன்... இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் அதிரித்துவருவதாக கூறப்பட்ட நிலையில் சுவாரஸ்ய திருப்பம்....
- 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்த டிராகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.... நெட் பிளிக்ஸில், மார்ச் 21ம் தேதி வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு....