ஆளுநர் உரையின் போது கடைபிடிக்க வேண்டிய ரூல்ஸ் என்ன? - வெளியான அறிக்கை

Update: 2025-01-07 02:24 GMT

ஆளுநர் உரையாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து சட்டபேரவைச் செயலகம் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆளுநருக்கு வழங்கப்படும் வழக்கமான வரவேற்பை தொடர்ந்து, முதல் நிகழ்ச்சியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆளுநர் தனது உரையினை நிகழ்த்துவார் என்றும், ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய உடனே, அதன் தமிழாக்கம் பேரவைத் தலைவரால் வாசிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதியில் 'நாட்டுப் பண்' பாடப்படும். அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் சட்டப்பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்