அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட் | Annamalai | Tweet

Update: 2025-01-07 02:04 GMT

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை வைத்து, அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் திசை திருப்பாமல் இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக அரசுக்கு தங்களின் தவறான ஆட்சியினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தை, திசை திருப்பி ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது என்றும்,

1991ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

1991 ஜூலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ​​முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும்,

தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, அரசு நிகழ்ச்சிகளில் ஆளுநரின் வருகையின் போதும், அவர் வெளியேறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசை ஆளுநர் கேட்டுள்ளார் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்