அரசு பள்ளிகள் நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்... புதிதாக ஒரு லட்சம் சேர்க்கை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 1ஆம் தேதி முதல்
மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில்
முதல் வகுப்பில் மட்டும் தமிழ் வழி கல்வியில் 72 ஆயிரத்து
646 மாணவர்களும், ஆங்கில வழி கல்வியில் 19 ஆயிரத்து
53 மாணவர்களும் புதிதாக சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும்
மற்ற வகுப்புகளில் 9 ஆயிரத்து 980 பேரும், மொத்தமாக ஒரு லட்சத்து 679 மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.