“போலி பத்திரம்.. நிலத்தை அபகரிக்க முயன்ற பாமக நிர்வாகி?“ -“எல்லா பட்டாவும் தப்பா?“ ஆவேசம் அடைந்த அதிகாரிகள்..

Update: 2024-12-21 06:44 GMT

சேலத்தில் பாமக நிர்வாகி போலியாக பத்திரப்பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. பெரிய புதூர் பகுதியில் ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே வேறொரு நிலம் தட பாத்தியம் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயசீலன் தம்பதி தங்கள் நிலத்தின் வழியாக சென்று அளவீடு செய்யக்கூடாது என்று சேலம் முனிசிபல் கோர்ட் மூலம் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்த சூழலில் நிலத்தை வாங்கிய பாமகவை சார்ந்த விஜயகுமார் போலீஸ் உதவியுடன் சர்வேயர் மூலம் நிலம் அளக்க முற்பட்டபோது, ஜெயசீலன் தடுத்து நிறுத்தினார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஜெயசீலன் நீதிமன்ற உத்தரவை காண்பித்த பிறகு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள், திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்