"இளைஞர்களின் கட்டைவிரலை துண்டிக்கும் பாஜக" - ராகுல் சரமாரி குற்றச்சாட்டு
ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது போல இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை பாஜக துண்டிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாணவர்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தில் தாங்கள் மாணவர்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நாட்டில் உள்ள இளைஞர்களின் குரலை பாஜக ஒடுக்க, எந்த விலை கொடுத்தேனும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்