தமிழ்த்தாய் பாடலுக்கு பதில்.. புதுவை பாடல்... சீமானின் சர்ச்சை பேச்சு - பதிப்பகம் அதிரடி விளக்கம்
சென்னை புத்தக காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றி பாடப்பட்டது குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில், பதிப்பாளர் என்ற முறையில் சீமானை அழைத்து, அரங்கு அமைத்துக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தாக்குதல், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் பபாசி அமைப்பும் இதற்கான அனுமதியை வழங்கியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் விருப்பத்தின் பேரிலேயே பாரதிதாசனின் பாடல் பாடப்பட்டது என்றும், நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்து அவர் பேசிய கருத்துக்கள் தங்களுக்கோ, பபாசி அமைப்பிற்கோ விருப்பமில்லாதது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.