"ஜான் மார்ஷல் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம்" - முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-01-05 14:41 GMT

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை அந்த கருத்தரங்கில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொய்ப்புனைவுகளை உடைப்போம், மெய்ப்பொருள் காண்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜான் மார்ஷல் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்