மாணவிகளின் கருப்பு துப்பட்டா விவகாரம் - அண்ணாமலை போட்ட ட்வீட்

Update: 2025-01-05 14:40 GMT

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவிகள், துப்பட்டாவை அகற்றிவிட்டு அரங்கத்திற்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது எவ்வகை எதேச்சதிகாரம்? என்றும் அந்த பதிவில் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்