தென்மாநிலங்கள் பரபரக்கும் விவகாரம் - அழுத்தமாக அடித்து சொன்ன திருச்சி சிவா
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, தொகுதி மறுசீரமைப்பால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு பெயரளவில் சொல்கிறது என்றும், ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது தலைவர்களை அழைத்தோ விளக்கமாக கூறாமல் தவிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.