தென்மாநிலங்கள் இல்லாத ஆட்சியை வடமாநிலங்களில் உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னை ஏழு கிணறு பகுதியில் அன்னதானம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்தை ஊக்கப்படுத்துவதா அல்லது ஊனப்படுத்துவதா எனக் கேள்வி எழுப்பினார்.