சட்டப் பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதற்காகவே தீர்மானம் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் அமைச்சரிடம் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகரே குறுக்கீடு செய்து பதில் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் வெற்றி பெறுவது முக்கியமல்ல; மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.