``கடன் அளவுக்கு மீறியதா? கட்டுக்குள் இருக்கிறதா?’’ -போட்டு தாக்கிய அமைச்சர்
தமிழ்நாட்டின் கடனை அரசு திறம்பட நிர்வகித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சதவிகிதம் என்ன என்பதைப் பொறுத்தே அந்த மாநிலத்தின் கடன்,,, அளவுக்கு மீறியதா அல்லது கட்டுக்குள் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியும் என கூறியுள்ளார். இதனைப் புரியாததுபோல அரசின் மீது குற்றம்சாட்டுவது விந்தையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.