குப்பையில் ஜெயலலிதா புகைப்படம்.. குபுகுபுவென குவிந்த அதிமுகவினர்

Update: 2025-03-18 02:21 GMT

தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் குப்பையோடு குப்பையாக போடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் கூடினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், துறை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கைகளாலேயே புகைப்படத்தை எடுக்க வைத்து சமரசம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்