"நாளை காலை 10 மணிக்கு..." - அண்ணாமலையின் அடுத்த அறிவிப்பால் பரபரக்கும் தமிழக அரசியல்

Update: 2025-03-21 12:24 GMT

திமுக அரசை கண்டித்து 22ம் தேதி சனிக்கிழமை, தமிழக பா.ஜ.க சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, ஒரு மெகா நாடகம் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். தமிழக பாஜக.வினர் 22ம் தேதி காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்