மதுரையில் நீதிப்பேரணி நடத்த முயன்ற பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதலை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை
வலியுறுத்தியும், பாஜக மகளிரணி சார்பாக இன்று நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்தது. ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் திமுக அரசு செயல்படுவதாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.