புத்தாண்டில் பிடிபட்ட புது வகை போதைப் பொருள் - மதிப்பு மட்டுமே ரூ.2.5 கோடியாம்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை, பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பறிமுதல் செய்தனர்.
சொக்கனஹள்ளி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை, பதுக்கி வைத்திருப்பதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வழக்குப் பதிவு செய்து, அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஹைட்ரோ காஞ்சா, எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை பதுக்கியவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். அதேடு, வீட்டில் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இது, பெங்களூரின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக, வைக்கப்பட்டிருந்தது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.