4ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கால்வாயில் வீசிய கொடூரன் - மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் 4ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு 24 பரகனாஸ் மாவட்டத்தில் உள்ள கால்வாயில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. க்ரிபாகலியில் டியூசன் முடித்து விட்டு மாணவி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது இக்கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் குழந்தையைக் காணாமல் பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையின் சடலத்தை மீட்டு குற்றவாளியைக் கைது செய்தனர்.