சபரிமலையில் அள்ளும் கூட்டம்.. -7 நாள்களில் பக்தர்கள் வருகை எவ்வளவு தெரியுமா?
மகர ஜோதிக்காக கடந்த 30ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஏழு நாட்களில் மட்டும் 7 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இன்னும் மகரஜோதிக்கு ஏழு நாட்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டியது உள்ளது.