பக்தர்கள் கவனத்திற்கு..! - சபரிமலையில் மாற்றி அமைப்பு - வெளியான அறிவிப்பு

Update: 2025-01-08 12:31 GMT

சபரிமலைக்கு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கானகப் பாதை வழியாக செல்வதற்கான அனுமதி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பாரம்பரியமிக்க சத்திரம் - புல்லுமேடு கானகப்பாதை வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். கானகப் பாதை, அடந்த காட்டுப்பகுதி என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மகர விளக்கு பூஜையையொட்டி ஒரு மணிநேரத்தைக் குறைத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்