ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி பெண்ணின் தலைமுடியை வெட்டிய நபர்

Update: 2025-01-08 08:12 GMT

மகாராஷ்டிர மாநிலம் மும்பை ரயில் நிலையத்தில்

கல்லூரி பெண்ணின் தலைமுடியை அடையாளம் தெரியாத நபர், கத்திரிக்கோலால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி செல்வதற்காக, தாதர் ரயில் நிலையத்திற்கு அந்தப் பெண் வந்தபோது, நடை மேம்பாலத்தில் பின்னால் நடந்து வந்த மர்ம நபர், பெண்ணின் கூந்தலை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக ரயில்வே காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்