மனைவியுடன் வந்த நீதிபதி... சுக்குநூறாக காரை உடைத்த இளைஞர்கள்.. வெளியான பகீர் சிசிடிவி
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில், கோரக்பூர் நீதிமன்ற நீதிபதி கார் கண்ணாடியை இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வேலையாக மனைவியோடு நீதிபதி காரில் சென்றபோது வழிமறித்த இளைஞர்கள், நீதிபதியோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிபதி கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது போதையில் இருந்ததும், அப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களின் மகன்கள் என்பதும் தெரியவந்துள்ளது.