ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்... வெடித்த கலவரம்... பதற வைக்கும் காட்சி
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்கள் வந்தடைந்தனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டு கேட் உடைந்ததால், தடியடி நடத்தப்பட்டு, நெரிசலலில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். 133 வேலைக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் முறையான போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.