விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 500 தொழிலதிபர்களின் 10 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்ட கெஜ்ரிவால், நடுத்தர மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.