"இன்னும் 2 ஆண்டில் குலசை ஏவுதளம்.. " - மேடையில் ஓபனாக சொன்ன இஸ்ரோ தலைவர் நாராயணன்
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், தன்னை சந்திக்கும் போது எல்லாம், குலசை ஏவுதளம் குறித்து பிரதமர் மோடி கேட்பதாகவும் கூறினார். ஜப்பானும் இந்தியாவும் இணைந்து சந்திரயான் 5ஆம் திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.