டோக்கன் இருந்தால் மட்டுமே இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால்தான் திருப்பதியில் விபத்து ஏற்பட்டதாக தேவஸ்தான முன்னாள் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு கூறியுள்ளார். இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்தால் தரிசனம் கிடையாது என்றும், டோக்கன் இருந்தால் மட்டுமே தரிசனம் என்பதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களை, வரிசையில் காத்திருக்க வைத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.