சென்னையில் ஏறிய 12 பயணிகளுக்கு நேர்ந்த கதி....அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-08 02:22 GMT

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில், வழக்கம் போல் மதியம் 2.50க்கு, எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலானது திண்டுக்கல் ரயில் நிறுத்தத்தில் நிற்கும் போது, பயணிகள் இறங்குவதற்கு தயாராக இருந்தனர். ஆனால் கதவுகள் திறக்கவில்லை. இதனால் திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய 12 பயணிகள் பரிதவித்தனர். பயணிகள் இறங்காமலேயே சிறிது நேரத்தில் ரயிலும் புறப்பட்டுவிட்டது. இதனை அறிந்த ரயில்வே அதிகாரிகள் கொடை ரோட்டில் வைத்து ரயிலை நிறுத்தி, 12 பயணிகளையும் இறக்கிவிட்டனர். அவர்களை மற்றொரு ரயிலின் மூலம் திண்டுக்கல்லில் இறக்கி விடவும் ஏற்பாடு செய்தனர். இதனால் வந்தே பாரத் ரயில், சுமார் 15 நிமிடங்கள் கால தாமதமாக மதுரை ரயில்நிலையம் வந்தடைந்தது. இதனை மற்றொரு சக பயணி உறுதிபடுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்