காருக்கடியில் சிக்கிய கன்றுக்குட்டி..கண்கலங்கி காரையே சுற்றி வந்த பசுமாடுகள்..அடுத்து நடந்த அதிசயம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் அடியில் கன்றுக்குட்டி மாட்டிக் கொண்ட நிலையில் அதைக்காக்க பசுமாடுகள் பாசப்போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. கன்றானது காருக்கடியில் சிக்கியதும் பசுமாடுகள் அந்தக் காரையே சுற்றி சுற்றி வந்தன... அக்கம்பக்கத்தினரும் கார் ஓட்டுநரும் காரைத் தூக்கிய பின்பு கன்று வெளியே வந்தவுடன் தான் அந்த பசுமாடுகள் நிம்மதி அடைந்தன...