சல்லி சல்லியாக நொறுக்கியதால் அதிர்ச்சி - கதிகலங்கி கிடக்கும் அல்லு அர்ஜுன் குடும்பம்

Update: 2024-12-23 02:23 GMT

தங்கள் வீட்டின் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல் நிதானத்தை கடைபிடிக்க உள்ளதாக, அல்லு அர்ஜுனனின் தந்தை அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த சம்பவம், அம்மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சுற்றுசுவர் மீது ஏறி அங்கிருந்த பூந்தொட்டிகளையும் அவர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. அங்கு பதற்றம் நிலவிய நிலையில், போலீசார் விரைந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து பேசியுள்ள அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த், தங்கள் வீட்டின் மீதான தாக்குதலை அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் நிதானத்தை கடைபிடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்