வேலைவாய்ப்பு திருவிழா - 71,000 பேருக்கு பிரதமர் மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்
அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு, நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, வேலைவாய்ப்பு திருவிழா மூலம் பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடக்கும் வேலைவாய்ப்பு திருவிழாவில், 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, காணொலி காட்சி வாயிலாக பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார். தொடர்ந்து அரசுப் பணிக்கான ஆணை பெற்றவர்களுடன் அவர் உரையாற்ற உள்ளார்.