#BRTEAKING || விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 60 ராக்கெட்... உலகின் கண்கள் இப்போ இந்தியாவின் மேலே

Update: 2024-12-30 16:57 GMT

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி - சி60 ராக்கெட்

"பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்" எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035ம் ஆண்டுக்​குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டம்

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்​ கீழ் விண்​ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்​கும் பணிகள்

தலா 220 கிலோ எடை கொண்ட, ஸ்பேடெக்ஸ் ஏ - ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்​கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் வடிவ​மைத்​துள்ள இஸ்ரோ

விண்​கலன்கள் புவி​யில் இருந்து 476 கி.மீ., தூரம் கொண்ட வெவ்​வேறு சுற்றுப்​பாதைகளில் நிலை நிறுத்​தப்பட உள்ளன

சில மாதங்​களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்​கொள்ளப்படும் - இந்த பணிகள் மொத்தம் 66 நாள்கள் நடைபெறும்

இந்தியாவின் விண்வெளி இலட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம்...

திட்டம் வெற்றியடைந்தால் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்

ராக்​கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்​தில் “போயம்“ என்ற பரிசோதனை​யும் மேற்கொள்ளப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்