விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது-கொதித்தெழுந்த அரசியல் தலைவர்கள்..பஞ்சாப்பில் பரபரப்பு
ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை பஞ்சாப் போலீசார் கைது செய்த நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், விவசாய அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நேற்று மத்திய அமைச்சர்களுடன், விவசாய சங்கத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரவு கானௌரி Khanauri மற்றும் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளையும் அகற்றினர்.