இந்தியாவின் முதல் புல்லட் ரயில் - பிரதமர் மோடியின் அறிவிப்பு

Update: 2025-01-06 11:48 GMT

நாடு முழுவதும் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தையும், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். டெல்லி மெட்ரோவின் முக்கியமான திட்டங்களை நேற்று தான் தொடங்கி வைத்ததாக தெரிவித்த பிரதமர் மோடி. இதன் மூலம் நாட்டில் மெட்ரோ நெட்வொர்க் இப்போது ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் விரிவடைந்து இருப்பதாக தெரிவித்தார். ரயில் பாதைகளில் 100 சதவீத மின்மயமாக்கலை இந்தியா நெருங்கி வருவதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகளும், ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்